தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள தொகுதி-1 மற்றும் தொகுதி-2 பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.
மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் உடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்விலவச பயிற்சி வகுப்பு திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை 14.07.2023 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-27660250, 6382433046, 9080022088 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்இ திருவள்ளுர் மாவட்டம்.
Thank you for your comments